இன்றைய இறைமொழி. வியாழன், 9 ஜூலை 2026. திருத்தூதுப் பணி

இன்றைய இறைமொழி
வியாழன், 9 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
ஓசே 11:1-4, 8-9. மத் 10:7-15

திருத்தூதுப் பணி

இஸ்ரயேல் மக்களை மனைவியாகவும் ஆண்டவராகிய கடவுளை கணவராகவும் உருவகம் செய்த இறைவாக்கினர் ஓசேயா, இன்றைய முதல் வாசகத்தில், ‘பிள்ளை-தந்தை’ என்னும் உருவகத்தைக் கையாளுகிறார். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த பாதுகாப்பையும், உடனிருப்பையும், பரிவையும், அன்பையும் இந்த உருவகம் எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவராகிய இயேசு தம் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்பும்போது அவர்களுக்கு வழங்குகிற அறிவுரைப் பகுதியை வாசிக்கிறோம். குறைவான சுமை, நிறைவான உடனிருப்பு, அமைதி அறிவிப்பு, எதிர்ப்புகள் வந்தாலும் தொடர் பயணம், எதையும் எதிர்பாராத நிறைவு ஆகியவை இயேசு வழங்கும் அறிவுரைகளின் உட்கூறுகளாக அமைந்துள்ளன.

நாம் ஒவ்வொருவரும் ஆண்டவராகிய கடவுளுடைய குழந்தை என்ற நிலையில் அவருடைய அன்பையும் பரிவையும் அனுபவித்துள்ளோம். அதை நாம் மற்றவர்களுக்கு வழங்குவதே நம்முடைய திருத்தூதுப் பணி.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment